search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் மனு"

    • கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர்-அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டியை சேர்ந்தவர் நல்ல தம்பி (வயது 58), முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி. இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சகோதரர் ரவிச்சந்திரன் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது மனைவி வள்ளி கொடைக்கானல் மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

    அப்போது கொடைக்கா னலில் வசித்து வந்த விஜய் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் தனது மனைவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தரும்படி கேட்டுக்ெகாண்டார்.

    இதுதொடர்பாக அவரும், நானும் மதுரை குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகியோர் சந்தித்து பேசினோம்.

    அப்போது வேலைக்கு ரூ.25 லட்சம் தரும்படி கூறினார். இதைத்தொடர்ந்து விஜய் சிவகாசியில் உள்ள வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளியை சந்தித்து எனது முன்னிலையில் ரூ.15 லட்சம் கொடுத்தார்.

    இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் எழுத்தர் பணி வாங்கி தரும்படி கேட்ட ஜெனிபர், சந்திரா, கிருஷ்ணம்மாள், சுகன்யா ஆகியோரிடம் இருந்து ரூ.23 லட்சம் வாங்கி ரவிச்சந்திரனிடம் கொடுத்தேன்.

    இதன் பின்னர் கணிதம், வேதியியல் பேராசிரியர் பணிக்காக கிரிஜா, சத்யா ஆகியோர் ரூ.45 லட்சம் ரவிச்சந்திரனிடம் கொடுத்தனர். மேலும் பூபாலன் என்பவர் பஞ்சாயத்து கிளாக் பணிக்காக ரூ.12 லட்சம் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார். மொத்தம் ரூ.95 லட்சம் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளியிடம் எனது முன்னிலையில் கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் கொடுத்த பணத்தை திரும்பி தரும்படி வற்புறுத்தினார். அப்போது ரவிச்சந்திரன் என்னிடம் ரூ.25 லட்சம் மட்டும் கொடுத்தார். இதில் ரூ.15 லட்சத்தை மட்டும் விஜயிடம் கொடுத்ேதன்.

    இந்தநிலையில் எனக்கு அறுவை சிகிச்சை நடை பெற்றதால் ரவிச்சந்தி ரனிடம் இருந்து பணத்தை பெற முடியவில்லை. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி பெற்ற பணத்தை வாங்கி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
    • கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.

     கடலூர்:

    பண்ருட்டி தோப்புகொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 75). அவரது மனைவி ரோஜாவர்ணம் . இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் . அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனி குடும்பம் நடத்தி வருகின்றனர். எனது 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் தனித்தனியாக வீடு கட்டி அவர்கள் பாகத்தில் குடியிருந்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் செல்வதற்கு பொதுப்பாதை அமைத்து கொடுத்துள்ளேன். இதில் தனசேகரன் என்பவர் பொதுப்பாதையில் மற்றவர்கள் செல்லும் வழியில் கார் மற்றும் இருசக்கரவாகனங்களை நிறுத்தி வைக்கின்றார். இது சம்பந்தமாக நாங்கள் கேட்ட போது என்னையும் எனது மனைவியையும் மூத்த மகன் சந்திரசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து கடந்த 23- ந்தேதி தேதி 2 பேரும் இரும்பு பைப்பு மற்றும் கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது.

    ×